Chittamiranga

இதை போல் அப்பாவுக்கு மிகவும் பிடித்த RTP


1. கடைக்கண் – தன்யாஸி 2. வேலவனே 3. அப்பா அவர்களே அமைத்த “மாமரமும் நிழலும் குயிலும்” திஸ்ரமும், கண்டமும் இணைந்த பல்லவிகள். நிரவலுக்கு வாசிக்க மிகவும் பிடிக்கும் என்பார்.

1. எந்தரா நீதனா 2. அடிகீசுகமு 3. மீனலோசனி – தன்யாஸியில் “சாமஜ கமன” – என்ற இடங்களில் வரும் நிரவலை பரம சுகமாகப் பாடுவார். என்பார். ”ராஜுதாமரபால்” – நிரவலும் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.

அரியக்குடி பாடல் அப்பாவுக்கு எப்போதும் பிடித்த ஒன்று. அவர் பாடும் பாடலை பட்டம்மாள் பாடும் போது ரொம்ப ஆனந்தப் பட்டுப் போவார். அரியக்குடி பாடும் ஹம்ஸத்வனி வர்ணம் பற்றி சொல்லும் போது அப்படியே அரியக்குடி மாதிரியே அச்சாக பாடுகிறார். மிகவும் உற்சாகமாக வாசிப்பேன் என்பார்.

பாடல்களில் அப்பாவுக்கு பிடித்த பாடல் வரிசைகளில் 1. மாமவ ஸததம் 2, ராநிதி ராது 3. முன்னு ராவண 4. தாஸுகோவல – இத்யாதிகள்.

அரியக்குடியின் ‘பிலஹரி’ ராக ‘தில்லானாவை’ – மிகவும் சிலாகித்து டிகேபி பாடும் போது அப்படியே அச்சாக அரியக்குடி வந்து விடுகிறார் என்பார்.

- லலிதா சிவகுமார்.