மாமேதைகள்

பொதுவாக பத்து நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தான் இப்படிப்பட்ட மஹா மேதைகள் தோன்றுவார்கள். ஆனால் என் விஷயத்தில் கடவுள் எனக்குப் பெரும் கருணை புரிந்திருக்கிறார். என் தகப்பனார் மிருதங்க மேதை மணி அய்யரும், என் மாமியார் டி.கே. பட்டம்மாளும் இந்த 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்.

மிருதங்க மணியான மணி அய்யரின் மகளாக பிறந்து, சங்கீத ஸரஸ்வதி டிகேபி யின் மருமகளாக நான் அந்த குடும்பத்தில் ஓர் அங்கமாக மாறி, நிழலாக உடன் இருந்ததை ஒரு வரபிரஸாதமாகவேகருதுகிறேன். இப்படி ஒரு அரிய வாய்ப்பளித்த கடவுளுக்கு கோடான கோடி முறை என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் நானும் அவர்களுடனே வாழ்ந்தேன் என்ற பெருமையும், மகிழ்ச்சியும் என் வாழ்நாள் முழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

- லலிதா சிவகுமார்.